ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்

ஜனநாயகனுக்கு வந்த சிக்கல்
  • PublishedFebruary 19, 2026

ஜனநாயகன் வெளியாகுவது பற்றி ,சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பாகவும், கேள்வியாகவும் இருக்கிறது. பட ரிலீஸுக்கு 4 நாட்களுக்கு முன்பு படத்தை மீண்டும் மறுத்தணிகை செய்ய வேண்டும்.அதற்கு மேலும் மூன்று வார கால அவகாசம் வேண்டும் என தணிக்கை வாரியம் சொன்னதால் தயாரிப்பாளர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர கடந்த ஒரு மாதமாக அதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

இம் மாதம் 5ம் திகதி தயாரிப்பாளர் நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற்று விட்டதாகவும் எப்படியும் இந்த மாதம் 19, 20 அல்லது 26, 27 ஆம் திகதிகளில் படம் வெளியாகிவிடும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் இப்போது வரை தணிக்கை வாரியம் இந்த திகதியில் நாங்கள் படம் பார்க்கிறோம் என்று தயாரிப்பாளருக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.

இதனால் இந்த வாரம் 26, 27  ஆம் திகதி களில் ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை என்கிற நிலை உருவாகியுள்ளது.  மேலும் ஜனநாயகன் திரைப்படம் தேர்தலுக்கு பின்னரே வெளியாக அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *