சுதா கொங்காராவை அலைய விடும் கீர்த்தி சுரேஷ்!
நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். தற்போது பெரிதாக வாய்ப்புகள் இல்லாமல் கிளாமருக்கும் தாவி இருக்கிறார்.
இந்நிலையில் அவர் தற்போது அவர், தற்போது ரகு தாத்தா என்ற படத்தில் கமிட் ஆகிருக்கிறார். இந்த படத்தின் சூட்டிங்கின் போது இயக்குனருக்கும் அவருக்கும் இடையில் மோதல் வெடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இவர்களுக்கு இடையே மனக்கசப்பு ஏற்பட்டு விட்டது. அடுத்தபடியாக முதல் செடியுலை முடித்துக் கொடுத்த கீர்த்தி சுரேஷ் இரண்டாவது செடியுலுக்காக கால் சீட் கொடுக்காமல் படக்குழுவினரை அலையவிட்டு வேடிக்கை பார்க்கிறார்.
இதையும் தாண்டி அவர்கள் கீர்த்தியிடம் கேட்டபோது ஏதோ ஒரு காரணத்தை சொல்லி கால்ஷீட் கொடுக்க மறுக்கிறார். இதனால் சுதா கொங்காரா. கீர்த்தி சுரேஷ் மேல் அதிக கடுப்பில் இருந்து வருகிறாராம்.
பொதுவாகவே சுதா கொங்காரா பற்றி சூர்யா மேடையில் பேசும்போதெல்லாம் மிகவும் பெருமையாகவும் நல்ல ஒரு இயக்குனர் என்றும் நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறார். அப்படி இருக்கையில் அவரையே இந்த மாதிரி கீர்த்தி சுரேஷ் அலைக்கழிக்க செய்வது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.