சிம்புவிற்கு விரைவில் திருமணம் : பெற்றோர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!
நடிகர் சிம்புவின் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் தான் பத்துதல. இந்த திரைப்படத்திற்கு இரசிகர்கள் மிகப் பெரிய அவளிவில் வரவேற்பு அளித்துள்ளனர்.
சிம்புவின் இந்த வெற்றி அவர்களுடைய பெற்றோருக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவருக்கு திருமணம் ஆகவில்லையே என்ற ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.
அண்மையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதும் இந்த கருத்தினை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், சிம்புவிற்கு விரைவில் திருமணம் செய்ய பெற்றோர்கள் முடிவெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஐந்து பெண்களை பார்த்து வைத்திருக்கிறார்களாம். விரைவில் அவருடைய திருமண செய்தி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.