அந்தகாலத்தில் 155 வீடுகளை வாங்கிக் குவித்த நடிகர் : ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடும் குடும்பம்!
தமிழ் சினிமாவின் இரட்டை வேடம் என்பதை அறிமுகப்படுத்திய பி.யு சின்னப்பா பற்றி உங்களுக்கு தெரியுமா? அந்த காலத்தில் 1000 ஏக்கர் நிலம் 155 வீடுகளை வாங்கி அரசாங்கத்திற்கே பயத்தை காட்டியிருந்தார்.
1940ல் வெளியான உத்தமபுத்திரன் என்ற படத்தில் இரட்டை வேடத்தில் நடித்ததன் மூலம் ஒரே நடிகர் இரு வேடங்களில் நடிக்கும் தமிழ் சினிமா மரபு தோன்றியது. அதன் பிறகு மங்கையகரசி திரைப்படத்தில் 3 வேடங்களில் நடித்து அசத்தினார். பின் நவராத்திரி படத்தில் 9 வேடங்களில் நடித்து அசத்தினார்.
பி யு சின்னப்பா மொத்தமாகவே தமிழ் சினிமாவில் 26 படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இவருடைய படங்கள் அனைத்தும் 100 நாட்களுக்கு மேல் திரையில் தாறுமாறாக வசூலை வாரி குவித்தது. இதனால் 30களில் அவர் கதாநாயகனாக நடிக்கும் போது ஒரு படத்திற்காக மட்டும் அசால்டாக ஒரு லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கி இருக்கிறார்.
இவ்வாறு அந்த காலத்திலேயே லட்சாதிபதியாக இருந்த பி யு சின்னப்பா உண்மையாகவே ராஜா மாதிரி வாழ்ந்தவர். நடித்து சம்பாதித்த பணத்தில் 1000 ஏக்கர் நிலம் வாங்கி இருக்கிறார் மற்றும் 155 வீடுகள் வாங்கியவர்.
இவர் வாங்கும் சொத்துக்களை பார்த்து பயந்து அரசாங்கம் இனிமேல் இவர் சொத்து வாங்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள அளவிற்கு பெரிய மனிதர். அவ்வளவு வசதியாக இருந்த சின்னப்பாவின் குடும்பம் இப்போது எந்த சொத்து சுகமும் இல்லாமல் ஒருவேளை சாப்பிட கூட வழி இல்லாமல் நிற்கதியாய் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ் சினிமாவில் இவருடைய பெயர் அடிக்கடி உச்சரிக்கப்படும்.