ரோபோ சங்கருக்கு சீக்ரட்டாக நடத்த ட்ரீட்மெண்ட்!
சமீபத்தில் ரோபோ சங்கர் வெளியிட்ட புகைப்படம் அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, பாடி பில்டர் போன்று இருந்த அவர் சமீபத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டு இருந்தார். அதில் அடையாளம் தெரியாத அளவுக்கு அவர் எலும்பும் தோலுமாக காட்சியளித்தார்.
அதைத்தொடர்ந்து அவருக்கு உடம்பில் ஏதோ மிகப்பெரிய பிரச்சனை என்று செய்திகள் வெளிவந்தது. அதற்கு மறுப்பு தெரிவித்த அவருடைய குடும்பத்தினர் ரோபோ சங்கர் நலமாக தான் இருக்கிறார் என்று கூறி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
இந்நிலையில் ரோபோ சங்கர் கடந்த ஆறு மாத காலமாக உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. அதாவது வெளிநாட்டுக்கு ஷூட்டிங் சென்ற இடத்தில் அவருக்கு வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது.
அதைத்தொடர்ந்து சில பிரச்சினைகளும் ஏற்படவே அவர் மருத்துவரை நாடி இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு ஆறு மாத காலமாக மஞ்சள் காமாலை இருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதை தொடர்ந்து அவருக்கான ட்ரீட்மென்ட் சத்தமில்லாமல் நடந்திருக்கிறது. தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ள அவர் சில மாதங்களில் பூரண நலம் பெற்று விடுவார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர்.