விக்னேஷ் சிவனை தொடர்ந்து மகிழ் திருமேனிக்கு நாமம் போட்ட அஜித்!
லைக்கா தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 கூட்டணி அமையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு பேர் அதிர்ச்சி காத்திருக்கிறது.
அதாவது ஏகே 62 படம் இப்போது பெரிய இடத்திற்கு கைமாற்றப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது அஜித் நேபாளத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். ஆகையால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் கசிந்துள்ளது.
ஆனால் இந்த படத்தை இயக்க இருப்பது மகிழ் திருமேனி இல்லையாம். அதற்கு பதிலாக சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறாராம் அஜித்.
இப்போது சூர்யாவின் கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வரவுள்ளது.
எனவே அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் சிறுத்தை சிவா மீண்டும் அவருடன் கூட்டணி போட இருக்கிறார்.
மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கிறது. விக்னேஷ் சிவனை தொடர்ந்து இப்போது மகிழ் திருமேனிக்கும் அஜித் பட்டை நாமம் போட்டுள்ளதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.