ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் வைத்த விஜய் : சூப்பர் அப்டேட் கொடுத்த ஜீவா!
நடிகர் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்திருப்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையே தளபதி 68 திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பொதுவாக விஜய் நடிக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிவடைவதற்குள் அடுத்த அப்டேட் வந்துவிடும். ஆகையால் ரசிகர்கள் அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் கேட்டு வருகிறார்கள்.
அந்தவகையில் தற்போது தளபதி 68 திரைப்படம் குறித்த அப்டேட்டை நடிகர் ஜீவா வெளியிட்டுள்ளார். சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் நடிகர் விஜய் இணையவுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில் ரசிகர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் தளபதி 68 அப்டேட் கொடுங்க என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஜீவாஇவிரைவில் என்று பதிவிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.