சூர்யாவை பலி தீர்க்கும் பாலா : குறித்த திகதியில் படம் வெளியாகுமா?
ஆரம்ப காலத்தில் சில தோல்வி திரைப்படங்களை கொடுத்து தடுமாறி வந்த சூர்யாவுக்கு பாலா தான் ஒரு முகவரியை கொடுத்தார். அவரின் இயக்கத்தில் வெளிவந்த நந்தா படத்தை தொடர்ந்து பிதாமகன் படமும் சூர்யாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
அதனாலேயே இந்த கூட்டணி மீண்டும் வணங்கான் திரைப்படத்தில் இணைந்தது. இருப்பினும் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சூர்யா தற்போது இந்த படத்தில் இருந்து விலகியுள்ளார்.
இது பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அருண் விஜய், சூர்யா நடித்து வந்த கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். தற்போது இந்த பட சூட்டிங் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்து வருகிறது.
இந்நிலையில், முன்னதாக சூர்யா தான் இந்த படத்தை தயாரித்து வந்தார். அவர் விலகியதை அடுத்து இதுவரை செய்த செலவை பாலா எப்படி திருப்பி கொடுப்பார் என்ற பேச்சும் இருந்தது. அந்த வகையில் தற்போது இவரே படத்தை தயாரித்து வருவதால் திட்டமிட்டபடியே படத்தை வெளியிட்டு சூர்யாவுக்கான பணத்தை கொடுக்கவும் அவர் ஆயத்தமாகி வருகிறாராம்.
ஏனென்றால் ஹீரோ மாற்றப்பட்ட காரணத்தால் படம் நிச்சயம் தாமதமாகும் என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் சூர்யாவை பழி தீர்க்கும் பொருட்டு படத்தை டிசம்பரில் வெளியிட பாலா முடிவு செய்து இருக்கிறார். அதன்படி எத்தனை தடைகள் வந்தாலும் வணங்கான் தாமதமாகாது என அவர் சொல்லாமல் சொல்லி இருக்கிறார்.