ஆண் நண்பரை நம்பி சென்ற நடிகை ஷாலு ஷம்முவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

ஆண் நண்பரை நம்பி சென்ற நடிகை ஷாலு ஷம்முவுக்கு காத்திருந்த அதிர்ச்சி
  • PublishedApril 24, 2023

 

ஆண் நண்பரை நம் சென்ற நடிகை ஷாலு ஷம்மு தனது கையடக்க தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அதன் பின்னர் இவர் நிறைய படங்களில் ஹீரோயின் தோழியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுப்பார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 9-ம் திகதி நண்பர்களுடன் நட்சத்திர விடுதிக்கு விருந்துக்கு சென்ற ஷாலு ஷம்மு அதன் பின்னர் சூலைமேட்டில் உள்ள அவரது நண்பர்கள் வீட்டில் இரவு தங்கியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் எழுந்து பார்த்ததில் நடிகை ஷாலு ஷம்முவின் செல்போன் காணாமல் போயுள்ளது. இதனையடுத்து உடனடியாக ஷாலு சம்மு நட்சத்திர விடுதிக்கு சென்று பார்த்துள்ளார். அங்கேயும் காணாததால் பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.

இந்த நிலையில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட அவரது விலை உயர்ந்த ஐபோன் குறிப்பிடப்படாத பார்சல் ஒன்றின் மூலம் வந்துள்ளது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மேலும் இது குறித்து ஷாலு ஷம்மு தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நான் சந்தேகப்பட்ட நபர் தான் தனது செல்போனை திருடி இருப்பதாகவும் 8 வருட நட்பு வீணாகி விட்டதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *