வேற்றுக்கிரகத்திற்கு செல்ல தயாராகுங்கள் – அட்டகாசமாக வெளிவந்த அயலான் அப்டேட்!

வேற்றுக்கிரகத்திற்கு செல்ல தயாராகுங்கள் – அட்டகாசமாக வெளிவந்த அயலான் அப்டேட்!
  • PublishedApril 24, 2023

இயக்குநர் ரவிகுமார்,  சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். ஏலியனுக்கும் மனிதனுக்கும் இடையேயான நட்பு தான் அயலான் படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்ளிடையே கேள்வி எழுந்தது.

இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதில், அயலான் படம் முழுவதும் வரும் வேற்று கிரக வாசி அனைவரும் விரும்பும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் 4500க்கும் அதிகமான விஎஃப்எக்ஸ் காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள லைவ் ஆக்சன் படமாக அயலான் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒரு வழியாக இந்தப் படத்தின் ரிலீஸ் திகதி  அறிவித்துள்ளது. இதன்படி இந்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *