குட் பேட் அக்லி முதல் பாடலால் அதிரும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவரவிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளனர். விடாமுயற்சி படத்தை தொடர்ந்து இப்படத்திலும் நடிகை த்ரிஷா கதாநாயகியாக அஜித்துடன் நடித்துள்ளார்.
மேலும் சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து, நேற்று படத்தின் முதல் பாடலான ஓ.ஜி. சம்வம் வெளியானது.
இந்நிலையில், அஜித் குமார் அவரது ரேசிங் அணியினர் உடன் சேர்ந்து, இத்தாலியில் உள்ள Ferrari மியூசியத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.