விஜயகாந்த் பட நடிகையின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது? அவரை ஞாபகம் இருக்கா?

விஜயகாந்த் பட நடிகையின் திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது? அவரை ஞாபகம் இருக்கா?
  • PublishedDecember 31, 2023

நடிகை இஷா கோபிகரின் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.

இவர் தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் உருவான ’அயலான்’ திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தவர் நடிகை இஷா கோபிகர்.

இவர் ஏற்கனவே விஜயகாந்த் நடித்த ’நரசிம்மா’ படத்தில் நடித்துள்ளார் என்பதும் அதன் பின்னர் ’என் சுவாச காற்றே’ ’நெஞ்சினிலே’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொழில் அதிபர் திம்மி நரங்க் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில மாதங்கள் பிரிந்து வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இருவருக்கும் விவாகரத்து கொடுத்து விட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

14 ஆண்டு கால திருமண வாழ்க்கையை நடிகை இஷா கோபிகர் முடித்துக் கொண்ட தகவல் ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *