விடாமுயற்சி படத்தில் அஜித் பெயர் என்ன தெரியுமா? செம்ம டுவிஸ்ட்…

விடாமுயற்சி படத்தில் அஜித் பெயர் என்ன தெரியுமா? செம்ம டுவிஸ்ட்…
  • PublishedDecember 31, 2023

அஜித் நடித்து வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் கேரக்டர் பெயர் அதே படத்தில் நடித்து வரும் இன்னொரு பிரபல நடிகரின் பெயர் என்பது தற்போது கசிந்துள்ளது.

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில், அனிருத் இசையில், லைக்கா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அதே நாட்டில் நடந்து வருகிறது.

தற்போது படப்பிடிப்பிற்கு இடைவெளி விடப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அதாவது ஜனவரி முதல் வாரம் மீண்டும் அஜர்பைஜானில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் அர்ஜூன் என்று தகவல் கசிந்து உள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவரது பெயரே அஜித் கேரக்டரின் பெயராக அமைந்துள்ளது எதிர்பாராத ஒற்றுமையாக கருதப்படுகிறது.

மேலும் இந்த படம் ஒரு அதிரடி ஆக்ஷன் படம் என்றும் இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவிற்கு புதுமையான ஆக்சன் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் ஜோடியாக த்ரிஷா நடிக்கும் இந்த படத்தில் அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்பட பலர் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது என்றும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *