இராமாயணத்தையே அவமதித்த ஆதிபுருஷ் திரைப்படம் : தடை செய்யக் கோரிக்கை!

இராமாயணத்தையே அவமதித்த ஆதிபுருஷ் திரைப்படம் : தடை செய்யக் கோரிக்கை!
  • PublishedJune 20, 2023

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ்,  சைப் அலிக்கான்,  கீர்த்தி சனோன் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்த படம் தான் ஆதிபுருஷ்.

அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்மறை விமர்சனங்களை தான் சந்தித்து வருகிறது.

குறிப்பாக இந்த படம்   ராமாயண காவியத்தை மையப்படுத்தி 3டி தொழில்நுட்பம் கொண்டு எடுக்கப்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒரு சிறு எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருந்தது. அது அனைத்தும் தோல்வியை தழுவியது.

இந்த படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள்.   ராமாயண காவியத்தின் புனிதமே கெட்டு விட்டதாக கூறி வருகிறார்கள்.

adipurush-cinemapettai

மேலும் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு காட்டப்பட்டு இருக்கும் பல காட்சிகள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் ராவணனின் ஹேர் ஸ்டைல் 2k கிட்ஸ் போல் இருப்பது கேலி,  கிண்டலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.

இது ஒரு புறம் இருந்தாலும் படத்தில் ராமர் மற்றும் அனுமரின் சுபாவமே வேறு மாதிரி காட்டப்பட்டிருக்கிறதாகவும் ஒரு குற்றச்சாட்டை எழுந்துள்ளது. பிரபாஸ் பாகுபலியாக ஆக்ரோஷமாக தெரிவதாக கூறப்படுகிறது.

இவ்வாறு பல எதிர்புகளை சந்தித்துள்ள இந்த படத்திற்கு தடை விதிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *