பயமும், பாசமும் : ரோபோ சங்கரின் திடீர் முடிவு!

பயமும், பாசமும் : ரோபோ சங்கரின் திடீர் முடிவு!
  • PublishedJune 20, 2023

மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர் பின்னர் வெள்ளித்திரையில், முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

சமீபகாலமாக உடல்நலப்பாதிப்பால் அவதிபட்டு வரும் அவர், தன்னுடைய மகளுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்கவும் தீர்மானித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டில்,  உயிர் பயத்தால் 21 வயதாகும் தன்னுடைய மகளுக்கு அவசர அவசரமாக திருமணத்தையும் பேசி முடித்ததாகவும் தெரிவித்தார்.

தன் மகளான  இந்திரஜாவிற்கு சொந்த முறைமாமனையே திருமணம் செய்து வைக்க பேசி முடித்து விட்டாராம். தன்னுடைய காலத்திற்குப் பிறகு மகளுக்கு சேர வேண்டிய சொத்துக்களையும் முன்கூட்டியே எழுதி வைத்துவிட்டாராம்.

indraja-cinemapettai

அந்த வகையில் சென்னையில் அவர் பெயரில் இருந்த வீடும் இந்திரஜா பெயரில் மாற்றப்பட்டு இருக்கிறது. மேலும் மகளின் திருமணத்திற்காக தங்க நகைகளையும் எடுத்து வைத்திருக்கிறார்.

இவ்வாறு வெறும் 21 வயதாக இருக்கும் இந்திரஜாவிற்கு அவசர அவசரமாக திருமண ஏற்பாடு செய்யப்பட்டு இருவீட்டாரும் பேசி முடித்து விட்டனர். விரைவில் இவர்களது திருமண திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *