கேலிக்கு ஆளான ஆதிபுருஷ்.. தூக்கத்தை தொலைத்த இயக்குநர்

கேலிக்கு ஆளான ஆதிபுருஷ்.. தூக்கத்தை தொலைத்த இயக்குநர்
  • PublishedJune 7, 2023

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

இப்படம் 3டி முறையில் பல கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

ராமாயண கதையில் உருவாக்கப்பட்ட ‘ஆதிபுருஷ்’ வெளியாக உள்ளதால், இத்திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நேற்றி இரவு திருப்பதி அருகே உள்ள தாரக ராமா மைதானத்தில் பிரமாண்டமான விழா நடைபெற்றது. இவ்விழாவில் ரசிகர்களுக்காக மைதானத்தின் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள், பிரமாண்ட மின்விளக்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. மைதானத்தை சுற்றிலும் காவி கொடிகள், ஜெய் ஸ்ரீ ராம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்ப்டடு இருந்தனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் 200 நடன கலைஞர்கள் கலந்து கொண்டு பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடினார். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக திருப்பதி வந்த பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்து இப்படம் வெற்றி அடைய வேண்டும் என வேண்டினார்.

மேலும் ஆதிபுருஷ் ப்ரோமேஷன் நிகழ்ச்சியில் பேசிய பிரபாஸ், ஆதிபுருஷ் திரைப்படத்தின் உண்மையான ஹீரோ இயக்குநர் தான் அவர் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார்.

முதலில் வெளியான டீசர் VFX மோசமாக இருப்பதாகவும், கார்டூன் படம் பார்ப்பது போல இருக்கிறது என்று கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதால், படத்தின் வெளியீட்டை படக்குழு தள்ளிவைத்தது.

தற்போது அவை அனைத்தும் சரி செய்யப்பட்டு வெளியான டீசர் 16மணி நேரத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. ஆதிபுருஷ் படத்திற்கு எழுந்த மோசமான விமர்சனத்தால் இயக்குநர் ஓம் ரவுத் கிட்டத்தட்ட ஏழு எட்டு மாதம் தூக்கத்தை தொலைத்தார்,

இதனால் இந்த படத்தின் உண்மையான ஹீரோ இவர் தான் என்று பிரபாஸ் கூறினார். மேலும் படம் வெளியாக உள்ள திரையரங்குகளில் ஆஞ்சநேயருக்காக ஒரு இருக்கை ஒதுக்கப்படும் என திரைப்பட குழுவினர் அறிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *