தன் வாழ்வில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் : அதே பெயரை வீட்டிற்கும் வைத்து அழகு பார்த்த தேவயானி!

தன் வாழ்வில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் : அதே பெயரை வீட்டிற்கும் வைத்து அழகு பார்த்த தேவயானி!
  • PublishedJune 7, 2023

90ஸ் கிட்ஸ்களின் பேவரிட் நடிகை என்றால் அது தேவயானி தான். இவரை எவர் க்ரீன் ஸ்டார் என்றுக் கூட சொல்லலாம்.

குழந்தை தனமான சிரிப்பு, பேச்சு என இவருடைய நடிப்பும், செய்கையும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விட்டது. நடிகை தேவையானி அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார்.

இருந்தாலும் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது காதல் கோட்டை திரைப்படம் தான். இந்த படத்தை அவருடைய கணவர் இயக்கி இருந்தார் என்பதும் முக்கிய காரணம்.

இந்த படத்தின் மூலம் தான் தேவயானி தனது காதல் வாழ்க்கையும் ஆரம்பித்திருந்தார். இந்நிலையில், அந்த படத்தை மறக்கக் கூடாது என்பதற்காக தனது வீட்டிற்கும் அதே பெயரையே வைத்து அழகு பார்த்துள்ளார்.

அதாவது,  இவர் வசித்து வரும் அசோக் நகர் வீட்டிற்கு கமலி என்று பெயர் சூட்டியிருக்கிறார். மேலும் அஜித் மற்றும் தேவயானி நடித்த காதல் கோட்டை படம் எவர்கிரீன் திரைப்படமாக எல்லோருடைய மனதிலும் ஆணித்தனமான முத்திரையை பதித்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *