சிம்புவால் சிக்கலில் சிக்கித் தவிக்கும் கமல் : என்ன செய்யப் போகிறார்?

சிம்புவால் சிக்கலில் சிக்கித் தவிக்கும் கமல் :  என்ன செய்யப் போகிறார்?
  • PublishedJune 7, 2023

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் வெளிவர இருக்கும் இந்தியன் 2 படத்தின் எதிர்பார்ப்பு  ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே இருக்கிறது.

இந்நிலையில் கமல் மற்றும் சிம்பு கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த படத்தில் பல சிக்கல்கள் இருந்து வருகிறது.  அதை எவ்வாறு சரி செய்வது அறியாமல் குழப்பத்தில் இருந்து வருகிறார் கமல்.

மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கமலின் தயாரிப்பில் சிம்புவின் 48வது படத்தை உருவாக்க இருந்த நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டதால் ஒன்றும் செய்வது புரியாமல் இருந்து வருகிறார்.

இதற்கு காரணமாக பார்க்கையில், கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருந்த படம் தான் கொரோனா குமார். இப்படத்தின் படப்பிடிப்பிற்கு ஆர்வம் காட்டாத சிம்பு தற்பொழுது லண்டனுக்கு சென்று விட்டதால் இதை குறித்து ஐசரி கே கணேசன் மற்றும் வேறு தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

மேலும் இப்படத்தை முடித்துக் கொடுத்தால் மட்டுமே கமல் படத்தில் நடிக்க முடியும். அவ்வாறு இல்லை என்றால் இந்தப் பிரச்சினையை வேற மாதிரி கொண்டு சென்று மறுபடியும் சிம்புவை தலை தூக்க முடியாமல் செய்து விடுவோம்.

ஏற்கனவே ஏமாற்றியது போல இந்த முறையும் ஏமாற்ற முடியாது என்று செக் வைத்துள்ளனர். இந்த மாதம் இறுதியில் எஸ் டி ஆர் 48 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நிலையில் இது போன்ற சம்பவம் அதிருப்தியை அளித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *