ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சாண்டி மாஸ்டர் : இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!

ஹீரோவாக அவதாரம் எடுக்கும் சாண்டி மாஸ்டர் : இசையமைக்கும் ஏ.ஆர். ரஹ்மான்!
  • PublishedJune 7, 2023

சாண்டி மாஸ்டர் ஆரம்பத்தில் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவில் நடனமாடும் கலைஞர்களுக்கு டான்ஸ் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

தற்போது  கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சினிமாவில் உள்ள ஹீரோகளுக்கு கொரியோகிராபராக வந்தார். பின்பு பிக் பாஸில் பங்கேற்று ரசிகர்கள் மனதில் இவருக்கு என்று ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

அதை வைத்துக்கொண்டு பல பாடல்களுக்கும் ஹீரோகளுக்கும் டான்ஸ் சொல்லிக் கொடுத்து முன்னணி டான்ஸ் மாஸ்டராக வந்து விட்டார்.

இந்த சமயத்தில் தற்போது இவர் புது ரூட்டை ஒன்றை ஃபாலோ செய்கிறார். அதாவது இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் விஜய்யின் மகன் கதாநாயகனாக நடிக்க வைப்பதற்கு இயக்குனர் பெரிய அளவில் முயற்சி செய்து வந்தார்.

ஆனால் அது எதுவும் நடக்கவில்லை. அதன் பின் அந்த கதையை வைத்து பெரிய ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவார் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அதற்கு மாறாக திடீரென்று டான்ஸ் மாஸ்டர் சாண்டியை ஹீரோவாக நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து பெரும் அதிர்ச்சி செய்தியாக வெளிவந்துள்ளது.

இன்னும் கூடுதல் அதிர்ச்சியை கொடுப்பது இந்த ஒரு விஷயம் தான். அதாவது உச்ச நட்சத்திரங்களுக்கு மட்டும் இசையமைக்கும் ஏ ஆர் ரகுமான் தற்போது இந்தப் படத்திற்கு இசையமைக்க போகிறாராம். எது எப்படியோ சாண்டி மாஸ்டரின் கடின உழைப்பிற்கு கிடைத்த பலன் தான் இது என்றும் அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *