அடுத்தடுத்து கமிட்டான பிரதீப் ரங்கராஜன் : கைக் கொடுக்குமா?

அடுத்தடுத்து கமிட்டான பிரதீப் ரங்கராஜன் : கைக் கொடுக்குமா?
  • PublishedJune 7, 2023

ஒரு வருடத்தில் பல படங்களைக் கொடுப்பவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தற்போது   லவ் டுடே படத்தின் நாயகன் ஆன பிரதீப் ரங்கராஜன் நடிக்க இருக்கும் படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்து வருகுிறார்.

விக்னேஷ் சிவன் கதையில் அஜித் நடிக்க இருந்த படம் கைவிடப்பட்ட நிலையில் பிரதீப்பை கொண்டு படம் இயக்க முடிவு எடுத்துள்ளார். மேலும் இப்படத்திலும் பிரதீப் ஹீரோவாக கலக்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையே இருந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் ஹீரோயின் ஆக நயன்தாரா இடம் பெறுவார் என்ற பேச்சும் இடம் பெற்று வருகிறது. இயக்குனராய் இருந்து ஹீரோவாய் மாறிய பிரதீப் ரங்கராஜனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்த வண்ணம் உள்ளது.

இதைத்தொடர்ந்து கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் இவர் அக்ரீமெண்ட் போட்டிருக்கிறாராம். லெஜெண்டுடன் கூட்டணி சேரும் வாய்ப்பை பெரிதாக எண்ணி இப்படத்தில் கமிட்டாகி உள்ளாராம்.

மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் பிரதீப் ரங்கராஜன் ஒரு படம் கைகோர்க்காராம். இது போன்ற பல எதிர்பார்ப்புகளை முன்வைத்து களம் இறங்கும் இவருக்கு இப்படங்கள் கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *