விரைவில் வெளிவரவுள்ள தளபதி படத்தின் டீசர் : அசந்துபோன படக்குழுவினர்!

விரைவில் வெளிவரவுள்ள தளபதி படத்தின் டீசர் : அசந்துபோன படக்குழுவினர்!
  • PublishedJune 7, 2023

சினிமாவில் லோகேஷின் அனுபவம் மிகவும் குறைவு என்றாலும்  அதன் மீது உள்ள காதல் மற்றும் ஆர்வத்தால் டஃப் நடிகர்களின் விருப்பமான இயக்குனராக மாறி உள்ளார்.

இப்போது தளபதி விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார். அதுவும் இந்த படத்தில் மிகப்பெரிய திரை பட்டாளத்தையே கூட்டி இருக்கிறார். அதேநேரம் இந்த படம் வரும் ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

ஆகவே வரம்  ஜூன் 12-ம் திகதி யுடன் லியோ படத்திற்கு எண்டு கார்டு போட்டு பூசணிக்காய் உடைக்க உள்ளார் லோகேஷ். அதாவது லியோ படத்தில் இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே சண்டை காட்சிகள் பாக்கி இருக்கிறதாம்.

மேலும் இந்த கடைசி ஷெட்யூலில் ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் நடிக்கிறார்களாம். இந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன் பின்னணி வேலைகளை லோகேஷ் தொடங்க இருக்கிறார். இதற்கு முன்னதாகவே லியோ படத்தின் டீசரை படு பயங்கரமாக ரெடி செய்துள்ளாராம்.

மேலும் டீசரை பார்த்த லியோ படக்குழு அசந்து விட்டனராம். விரைவில் டீசர் வெளியாகும் என்ற செய்தி தற்போது ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *