“விடாமுயற்சி”க்கு என்ன ஆச்சி? திடீரென சென்னை திரும்பிய அஜித்… ட்ரெண்டாகும் வீடியோ
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது அஜித் திடீரென சென்னை திரும்பியுள்ள நிலையில், அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
விடாமுயற்சி படத்தை ஓரிரு ஷெட்யூலில் முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். கடந்த பிப்ரவரி மாதமே ஆரம்பித்திருக்க வேண்டிய விடாமுயற்சி ஷூட்டிங், ரொம்பவே தாமதமாக தொடங்கியது. அதாவது விக்னேஷ் சிவனுக்குப் பதில், மகிழ் திருமேனி இயக்குநராக கமிட்டானதால் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் லேட்டானது.
இதனால் விடாமுயற்சி ஷூட்டிங்கை நான் ஸ்டாப்பாக நடத்தி முடித்துவிட வேண்டும் என அஜித் முடிவு செய்துள்ளாராம். அதன்படி, விடாமுயற்சி படப்பிடிப்புல் பெரும்பாலான போர்ஷன்களை அஜர்பைஜானில் எடுத்துவிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால், ஆர்ட் டைரக்டர் மிலன் உயிரிழந்தபோதும் விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தப்படவில்லை.
அதேபோல், தீபாவளி பண்டிகைக்கும் விடாமுயற்சி படக்குழுவில் இருந்து ஒருவர் கூட சென்னை திரும்பாமல் பிஸியாக நடித்து வந்தனர்.
ஏற்கனவே விடாமுயற்சி ஷூட்டிங் தாமதமாக தொடங்கியதால் இனி தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படக் கூடாது என அஜித் உறுதியாக இருக்கிறாராம். இந்த சூழலில் தற்போது அஜித்தே திடீரென சென்னை திரும்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜர்பைஜானில் இருந்து அஜித் சென்னை திரும்பிய வீடியோ வைரலாகி வருகிறது. சென்னை விமான நிலையத்தில் இருந்து செம்ம ஸ்டைலிஷாக வெளியேறினார் அஜித்.
இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தப்படவில்லை என சொல்லப்படுகிறது. இன்று (நவ.24) மாலை கலைஞர் நூற்றாண்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல்ஹாசன், இளையராஜா, அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்கின்றனர். இந்த விழாவுக்காக அஜித், விஜய் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக தான் அஜித் சென்னை திரும்பியதாகக் கூறப்படுகிறது. இந்த விழா முடிந்ததும் ஓரிரு நாளில் அஜித் மீண்டும் அஜர்பைஜான் சென்றுவிடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
https://twitter.com/VinithaAK/status/1727946468886204649