இழுப்பறியில் அஜித் படம் : வலிமை படம் போல் அப்டேட் கேட்டு நச்சரிக்கும் இரசிகர்கள்!

இழுப்பறியில் அஜித் படம் : வலிமை படம் போல் அப்டேட் கேட்டு நச்சரிக்கும் இரசிகர்கள்!
  • PublishedMarch 26, 2023

துணிவு படத்தை அடுத்து அஜித் குமார் நடிக்கவிருக்கும் படத்தை தற்போதைக்கு ஏ.கே. 62 என்று அழைக்கிறார்கள். அந்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவிருக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தாயரிக்கவுள்ளது.

இந்நிலையில், முன்னதாக ஏகே 62 திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. குறிப்பாக விக்னேஷ் சிவனிடம் இருந்து வேறு ஒரு இயக்குனருக்கு படம் கைமாறியது.

இதற்கிடையே தற்போது நடிகர் அஜித்தினுடைய தந்தை சுப்பிரமணியன் அவர்களும் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில். இந்த படம் குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இந்த மாதமும் வெளியாகாது என தகவல் கசிந்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடலாம் என்று இருக்கிறதாம் லைகா நிறுவனம். தந்தையை இழந்த அஜித்தை உடனே படப்பிடிப்புக்கு வருமாறு கூற விரும்பவில்லையாம். அதனால் அவர் எப்பொழுது ரெடி என்று சொல்கிறாரோ அப்பொழுது படப்பிடிப்பை துவங்குவார்களாம். மே மாதம் படப்பிடுப்பு துவங்கலாம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *