கரகாட்டன் 2 திரைப்படம் எடுக்கப்படுமா? : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இரசிகர்கள்!

கரகாட்டன் 2 திரைப்படம் எடுக்கப்படுமா? : உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் இரசிகர்கள்!
  • PublishedMarch 26, 2023

80 காலகட்டத்தில் ரஜினிஇ கமலுக்கு இணையான புகழ் மற்றும் அந்தஸ்தோடு இருந்தவர் தான் ராமராஜன். அதிலும் கிராமத்து கதாபாத்திரங்கள் இவருக்கு பக்காவாக பொருந்தும். அப்படி இவர் நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் ஒன்று தற்போது 33 ஆண்டுகள் கழித்து இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.

அதாவது கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன்,  கனகா,  கவுண்டமணி,  செந்தில் போன்ற பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்த திரைப்படம் தான் கரகாட்டக்காரன். கிட்டத்தட்ட 425 நாட்கள் தியேட்டரில் ஓடி சாதனை படைத்த இந்த திரைப்படம் இப்போதும் கூட ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது.

Tamilmirror Online || கரகாட்டக்காரன் 'கனகாவா' இவர்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அந்த வகையில் தற்போது கங்கை அமரனின் மகன் வெங்கட் பிரபு கரகாட்டக்காரன் 2 வை எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்.

ஏற்கனவே இது குறித்து ஒரு பேச்சு திரையுலகில் அடிபட்டுக் கொண்டு தான் இருந்தது. அதில் ராமராஜன் அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூட பேசப்பட்டது.

ஆனால் இப்போதும் கூட நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று அவர் அடம் பிடித்த காரணத்தினால் இந்த பேச்சுவார்த்தை முற்றுப்பெறாமல் இருந்தது. ஆனால் தற்போது கரகாட்டக்காரன் 2 உருவாவது உறுதி என வெங்கட் பிரபு ஒரு மேடையில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *