‘பகாசூரன் திரைப்படம் குறித்து மோன் ஜீ உருக்கம்!

‘பகாசூரன் திரைப்படம் குறித்து மோன் ஜீ உருக்கம்!
  • PublishedMarch 26, 2023

பழைய வண்ணாரப்பேட்டை,  ‘திரெளபதி’,  ‘ருத்ரதாண்டவம்’ ஆகிய படங்களை இயக்கிய மோகன் ஜி தற்போது இயக்கியுள்ள படம் ‘பகாசூரன்’.

இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் கதையின் நாயகனாகவும்,  நட்டி நட்ராஜ்,  ராதாரவி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில் ‘பகாசூரன்  அமேசான் பிரைம் தற்போது.. குடும்பத்துடன் தயவு செய்து பாருங்கள்.. பேச முடியாத சில விஷயங்களை திரையில் பேசி உள்ளோம்.. நிச்சயம் சில வகையான தவறுகளில் சிக்கி கொள்ளமல் இருக்க இந்த திரைப்படம் உதவும்.. தெரிந்தவர்களையும் பார்க்க சொல்லுங்கள் நன்றி. எனத் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *