விஜய்காக தயாரிப்பாளர்களுடன் டீல் பேசும் அட்லீ!
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவருடைய அடுத்த படம், கூட்டணி குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கிடையே விஜய் அவருடைய ஆஸ்தான இயக்குனரான அட்லீயுடன் படம் பண்ண வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் கனவாக இருக்கிறது.
இந்த கூட்டணியில் மீண்டும் படம் தயாரிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. இந்நிலையில், எப்போதுமே தயாரிப்பு நிறுவனங்களிடம் ஹீரோக்கள் தான் டீல் பேசுவார்கள். ஆனால் இங்கு அட்லீ தான் டீல் பேசி வருகிறாராம்.
அதாவது சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் தன் அண்ணனுக்கும், தனக்கும் சேர்த்து மொத்தம் 200 கோடி தந்துவிட சொல்கிறாராம்.
இந்த 200 கோடியில் விஜய் தனக்கு எவ்வளவு வேண்டுமோ அதை எடுத்து கொண்டு மீதி அட்லீக்கு கொடுப்பதாக பிளானாம். விஜய் காட்டிய ஓவர் நெருக்கத்தால் இன்று அட்லீ தயாரிப்பாளர்களிடம் டீல் பேசும் அளவிற்கு வந்துள்ளார் என விமர்சிக்கப்படுகிறது.