கேப்டனின் கைக்கூடாத காதல் : காதலித்த பெண்ணைபோலவே பார்த்து கட்டி வைத்த பெற்றோர்!

சினிமா பிரபலங்கள் தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் மூலம், காதலிக்கவும் செய்வார்கள். ஆனால் அந்த காதல்கள் பெரும்பாலும் நிறைவேறாத காதல்களாக தான் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் விஜயகாந்தின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளது.
தமிழில் நீதியின் மறுபக்கம் என்னும் திரைப்படத்தின் மூலம் முதன்முதலாக விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்தவர் தான் நடிகை ராதிகா. அதற்கு முன்னாலேயே ராதிகாவுக்கு அவருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் விஜயகாந்தின் தோற்றத்தை காரணம் கூறி நடிக்க மறுத்து விட்டாராம்.
அதன் பின்னர் விஜயகாந்த் ஒரு மிகப்பெரிய ஹிட் ஹீரோவாக மாறவும் அடுத்தடுத்து ராதிகா அவருடன் படங்களில் கமிட்டாக ஆரம்பித்தார். தொடர்ந்து இருவரும் சேர்ந்து படங்கள் பண்ணியதால் இருவருக்குள்ளும் நல்ல நெருக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கி இருக்கின்றனர்.
ஆனால் விஜயகாந்தின் குடும்ப உறுப்பினர்கள் இந்த காதலுக்கு கடைசி வரை மறுப்பு தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் ஜாதகம் பார்த்து அதுவும் செட் ஆகவில்லை என்று திருமணத்தை நிறுத்தியதாக கூட தகவல்கள் இருக்கின்றன.
ராதிகா இவர்களுடைய திருமணத்திற்காக திருமண புடவை முதற்கொண்டு வாங்கிய பிறகு தான் இந்த திருமணம் நின்றதாம். இதனால் இருவரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார்கள்.
அதன்பின்னர் விஜயகாந்த் அவருக்கு பார்க்கும் பெண்ணை எல்லாம் வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். கடைசியில் அவருடைய நெருங்கிய நண்பர் ராவுத்தர் பார்த்த பெண்தான் பிரேமலதா விஜயகாந்த்.
அவர் பார்ப்பதற்கு சாயலில் ராதிகா போல் இருந்ததால் அவரை ஓகே செய்த ராவுத்தர். ராதிகாவை போன்றே மேக்கப் போட்டு அந்த புகைப்படத்தை விஜயகாந்த்திடம் காட்டி திருமணத்திற்கு சம்மதம் வாங்கி இருக்கிறார்.