லோகேஷுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் தயாரிப்பாளர்கள்!

லோகேஷுக்காக கோடிகளை கொட்ட தயாராகும் தயாரிப்பாளர்கள்!
  • PublishedApril 15, 2023

மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் மிகக்குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்கள் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார்.

கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து மொழியில் உள்ள டாப் நடிகர்கள் லோகேஷுக்கு வலை வீசி உள்ளனர்.

அடுத்ததாக கைதி 2  விக்ரம் 2 என லோகேஷ் எல்சியு லைன் அப்பில் நிறைய படங்கள் இருக்கிறது. இந்த சூழலில் கடந்த சில வருடங்களாக ரஜினிக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படமும் ஓடவில்லை.

இதற்கிடையே தன்னுடைய கடைசி திரைப்படம் தரமான படமாக இருக்க வேண்டும் என ரஜினி உறுதியாக உள்ளார். ஆகையால் அவருடைய முதல் தெரிவு லோகேஷ் தான்.

இந்நிலையில்,  லோகேஷ்,   ரஜினி இணையும் படத்தை யார் தயாரிப்பது என தயாரிப்பாளர்களுக்குள் போட்டி நிலவி வருகிறது. பெரிய நிறுவனங்கள் எல்லாம் தான் இந்த படத்தை இயக்குவேன் என முந்தி அடித்துக்கொண்டு வருகிறார்கள்.

லோகேஷ் தற்சமயம் ஒரு படத்திற்கு 25 கோடி சம்பளமாக பெற்று வருகிறார்.ஆகையால் ரஜினியின் கடைசி படத்தை இயக்க லோகேஷுக்கு 60 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்போது ரஜினியின் சம்பளத்தை லோகேஷ் நெருங்கி விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *