47 வயதில் தல பொங்கல் கொண்டாடிய பிரபலம்.. காதல் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்

47 வயதில் தல பொங்கல் கொண்டாடிய பிரபலம்.. காதல் மனைவியுடன் வெளியிட்ட புகைப்படம்
  • PublishedJanuary 17, 2024

சினிமா பிரபலங்களில் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட பல பிரபலங்கள் தல பொங்கல் கொண்டாடினர்.

அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிய நிலையில் அனிருத்தின் நண்பர் ஒருவர் 47 வயதில் தல பொங்கல் கொண்டாடி போட்டோக்களை தெறிக்க விட்டிருந்தார்.

அதாவது அந்த பிரபலம் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இப்போது காமெடி என்றாலே ரசிகர்களுக்கு சற்றென்று ஞாபகத்திற்கு வருவது ரெடின் கிங்ஸ்லி தான். இயக்குனர் நெல்சனின் எல்லா படங்களிலுமே ரெடின் கிங்ஸ்லி இடம் பெறுவார்.

அதுவும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் பகத் என்ற கதாபாத்திரத்தில் அருமையாக நடித்திருந்தார். இந்நிலையில் ரெடின் கிங்ஸ்லி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். நீண்ட வருடங்களாக நடிகை சங்கீதா என்பவரை காதலித்து வந்த இவர் கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.

ரெடின் கிங்ஸிலிக்கு 47 வயதாகும் நிலையில், அவரது மனைவி சங்கீதாவுக்கு 45 வயதாகிறது. சங்கீதா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர்.

மேலும் ரெடின் கிங்ஸ்லிக்கு இது முதல் திருமணம் தான். இவர்கள் இருவரும் தல பொங்கல் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

மேலும் ரெடின் கிங்ஸிலி சினிமாவை தாண்டி பல துறைகளில் முதலீடு செய்து வருகிறார். இதன் மூலம் நல்ல வருமானம் பார்த்து வருகிறார். மற்றொரு பக்கம் பட வாய்ப்புகளும் ஏக்கசக்கமாக ரெடின் கிங்ஸிலிக்கு குவிந்து வருகிறது. இப்போது திருமண வாழ்க்கை அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *