இசைஞானியிடம் திட்டு வாங்கிய சித்ரா : பல நாள் கழித்து போட்டு உடைத்த ரகசியம்!

இசைஞானியிடம் திட்டு வாங்கிய சித்ரா  : பல நாள் கழித்து போட்டு உடைத்த ரகசியம்!
  • PublishedApril 17, 2023

பாடகி சித்ராமா, 80ஸ் கிட்ஸ் தொடங்கி 2கே கிட்ஸ் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். ஆனால் இவர் பாடவந்தபொழுது இசைஞானி இளையராஜாவிடன் செம்மயாக திட்டு வாங்கியிருக்கிறாராம். அதை அவரே பேட்டி ஒன்றில் கூறியிருருக்கிறார்.

இசையமைப்பாளர் தேவா இசையில் உருவான பாடலை சின்னக் குயில் சித்ரா பாட முடியாது என சொல்லிவிட்டாராம். ஏனென்றால் அந்தப் பாடலில் இரட்டை அர்த்தம் உள்ள வல்கரான வார்த்தை அதிகமாக இருந்ததால் அந்த பாடலை எஸ்.பி.பி மறுத்துவிட்டாராம்.

ஆனால் சின்ன குயில் சித்ராவால் அப்படி சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அந்த சமயம் தான் அவர் வளர்ந்து கொண்டு இருந்தாராம். இருப்பினும் அந்தப் பாடலின் இசையமைப்பாளர் தேவாவிடம் சென்று இந்த ஒன் லைன் மட்டும் மாற்றி தர முடியுமா என்று கேட்டிருக்கிறாராம்.

உடனே அவரும் மாற்றித் தர முயற்சிக்கிறேன். இந்த பாடலை இன்று எடுக்க வேண்டாம். இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று சித்ராவை அனுப்பி விட்டாராம். அதன் பிறகு சித்ராவை அந்த பாடலில் இருந்து தூக்கி விட்டனர். வேறொரு பாடகி அந்த பாடலை பாடினார்.

இது எப்படியோ இளையராஜாவிற்கு தெரிய வந்தது. உடனே சித்ராவை அழைத்துஇ ‘பாடலின் வரிகள் அசிங்கமா இருந்தா உங்களுக்கு என்ன? அதையெல்லாம் ஏன் பார்க்கிறீர்கள்! உங்கள் வேலை எழுத்துக்களுக்கு குரல் கொடுப்பது மட்டும்தான்.

எந்த கலைஞரும் வேண்டுமென்று அவ்வாறு எழுத மாட்டார்கள். கதைக்குத் தேவையானதை தான் எழுதி இருப்பார்கள்’ என கடிந்து கொண்டாராம். அப்போதுதான் சித்ராவிற்கு அவர் செய்த தவறு என்ன என்பது புரிந்ததாம். இப்போ வரைக்கும் அதை ஃபாலோ பண்ணி வருகிறேன் என்றும் சித்ரா  தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *