சோசியல் மீடியாவில் வைரலாகும் அஜித் நடிகையின் தற்போதைய புகைப்படம்!

சோசியல் மீடியாவில் வைரலாகும் அஜித் நடிகையின் தற்போதைய புகைப்படம்!
  • PublishedMay 4, 2023

நடிகர் அஜித்குமார், ஜோதிகா, வடிவேலு,  மதன் பாப்,  நளினி நடித்த ராஜா திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருப்பார்.

பிளாஷ்பேக் காட்சியில் வரும் இவர் தன்னுடைய குழந்தைத்தனமான நடிப்பால் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ராஜா திரைப்படத்தை தொடர்ந்து பிரியங்காவுக்கு சீயான் விக்ரம் உடன் இணைந்து காதல் சடுகுடு என்னும் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து   நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஜனனம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இவருக்கு தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. தமிழில் ஒரு சில படங்களிலேயே இவர் நடித்திருந்தாலும்  ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில். அவரின் தற்போதைய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *