மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா!

மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா!
  • PublishedApril 9, 2023

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது ஹாலிவுட் வரை சென்று கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் சூப்பர் ஸ்டார் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

இருப்பினும் கடந்த வருடம் இருவரும் பிரிந்து வாழப்போவதாக அறிக்கை வெளியிட்டனர். இந்த விடயம் அவர்களுடைய இரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. விவாகரத்து வேண்டாம் எனக் கூறி சமரசம் செய்யும் முயற்சியில் குடும்பத்தினர் இறங்கிய போதிலும் எதுவும் கைக்கொடுக்கவில்லை.

இதற்கிடையே போயஸ் கார்டனில் நிலம் வாங்கியிருந்த தனுஷ் அங்கு புதுமனை ஒன்றை கட்டியுள்ளார். ஆனால் கிரகப்பிரவேசத்தில் கூட மனைவி மற்றும் மகன்கள் இருவரும் கலந்துக்கொள்ளவில்லை. இது அவர்களுடைய பிரிவை ஊர்ஜிதப்படுத்தியது.

இருந்தாலும் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் அவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

அதாவது,  அவர்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை,தனியாக வாழப்போகிறோம் என்று தான் கூறினார்களே தவிர விவாரத்துக்கு நோட்டிஸ் இருவரும் கொடுக்கவில்லை.

தேவைப்படும் போது இருவரும் பேசிக்கொள்வதாக சுப்ரமணிய சிவா கூறியதாகவும் கணவர் மனைவிக்கு இடையே இதெல்லாம் சகஜம் தான்.தனுஷ் – ஐஸ்வர்யா பிரியபோவதில்லை கண்டிப்பாக சேர்ந்துவிடுவாங்க என்றும் கூறியிருக்கிறாராம்.

இது கணவர் – மனைவிக்கு இடையில் ஒரு ஊடல் தான்இ ஒரே ஓட்டலில் இருந்து தான் அறிக்கை வெளியிட்டதால் இருவரும் சேர்ந்து வாழ்வார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *