பிறந்தநாளின் போது தனுஷ் கொடுக்கவுள்ள சப்ரைஸ்!

பிறந்தநாளின் போது தனுஷ் கொடுக்கவுள்ள சப்ரைஸ்!
  • PublishedJune 17, 2023

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதில் பிரியங்கா அருள் மோகன்,  நிவேதிதா சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தனுஷ் ஜூலை 28ம் திகதி தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதன்போது கேப்டன் மில்லர் படத்தின் டீசரை வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அடுத்த வாரத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்றும் அதில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பும் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *