ஒரே ஒரு போஸ்டர்… ஒட்டுமொத்த மாமன்னன் டிரெய்லரும் சைலன்டாகி விட்டது!!

ஒரே ஒரு போஸ்டர்… ஒட்டுமொத்த மாமன்னன் டிரெய்லரும் சைலன்டாகி விட்டது!!
  • PublishedJune 18, 2023

லோகேஷ் கனகராஜின் ட்வீட்டும் அதை தொடர்ந்து வெளியான லியோ போஸ்டரும் மாமன்னன் டிரெய்லர் டிரெண்டிங்கை டோட்டலாக காலி செய்தது.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பகத் ஃபாசில் நடிப்பில் உருவாகி உள்ள மாமன்னன் படத்தின் டிரெய்லர் இசை வெளியீட்டு விழாவில் வெளியாகாமல் நேற்று பிரத்யேகமாக வெளியானது.

இந்த நிலையில், நடிகர் விஜய் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடங்களில் தேர்வாகி வெற்றிப் பெற்ற மாணவர்களை சந்தித்து அவர்களை பாராட்டி ஊக்கத்தொகையும் கொடுத்தார்.

இந்நிலையில், இது தொடர்பான செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியா உட்பட அனைத்து ஊடகங்களையும் விழுங்கி விட்டது. இதனால் மாமன்னன் நினைவுக்கே வராத படி ஆகிட்டு.

இதையடுத்து, உதயநிதிக்கு செக் வைத்து தனது அரசியல் ஆட்டத்தை விஜய் தொடங்கி விட்டார் எனக் கூறுகின்றனர்.

நடிகர் விஜய் வாயில் சிகரெட்டை வைத்துக் கொண்டு, ஏகப்பட்ட பீர் கிளாஸ்களுடன் 2000 டான்ஸர்கள் இருக்கும் சர்ச்சைக்குரிய போஸ்டர் வெளியான உடனே மாமன்னன் படத்தின் டிரெய்லரே எடுபடாமல் போய் விட்டது.

நடிகர் விஜய் உதயநிதி ஸ்டாலினுக்காக பார்த்திருந்தால், நேற்று அந்த போஸ்டர் அறிவிப்பை வெளியிட்டு இருக்க மாட்டார் என்றும் கூறுகின்றனர்.

மாமன்னன் படத்தின் டிரெய்லரை பின்னுக்குத் தள்ளிவிட்டு விஜய்யின் ஆல்டர் ஈகோ நான் ரெடி பாடலின் போஸ்டர் டிரெண்டாகி வருவதை கவனித்த லோகேஷ் கனகராஜ் தான் சேஃப் ஆகி விட வேண்டும் என்பதற்காகத்தான் மாமன்னன் டிரெய்லரை பாராட்டி ட்வீட் போட்டார் என்றும் கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *