தளபதி 68 இற்கு இவர் வேண்டவே வேண்டாம் : வெங்கட் பிரபுவிற்கு கன்டிஷன் போட்ட விஜய்!

தளபதி 68 இற்கு இவர் வேண்டவே வேண்டாம் : வெங்கட் பிரபுவிற்கு கன்டிஷன் போட்ட விஜய்!
  • PublishedMay 17, 2023

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் 60 சதவீத  படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ஒரு அக்டோபர் மாதம் 19ஆம் திகதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதிரடி ஆக்சன் கதை களத்தை கொண்ட இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.

இதற்கிடையே தளபதி 68 திரைபடத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி அடுத்ததாக ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே வெங்கட் பிரபு இயக்கும் திரைப்படங்களில் பெரும்பாலும், யுவன் சங்கர் ராஜாதான் இசையமைப்பார். வெங்கட் பிரபுவின் ஆஸ்தான் இசையமைப்பாளர் இவர்தான். ஆனால் தளபதி 68 இல் இவருக்கு பதிலாக அனிருத்தை விஜய் ரெக்கமன்ட் செய்திருக்கிறாராம். காரணம் விஜயினுடைய உதய கீதம் திரைப்படத்திற்கு இசையமைத்தது யுவன்தான்.

ஆனால் அந்த படம் விஜய்க்கு தோல்வியை கொடுத்தது. ஆகவே அவர் வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *