“ரஷ்மிகாவை விட நான் தான் அதற்கு பொறுத்தமாக இருப்பேன்” ஐஸ்வர்யா தடாலடி

“ரஷ்மிகாவை விட நான் தான் அதற்கு பொறுத்தமாக இருப்பேன்” ஐஸ்வர்யா தடாலடி
  • PublishedMay 17, 2023

நடிகை ரஷ்மிகா மந்தனாவை விட புஷ்பா படத்தில் நடிப்பதற்கு நான் தான் பொருத்தமாக இருப்பேன் என ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்திருக்கிறார். இளம் நடிகையாக இருந்தாலும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை பக்குவமான கலைஞராக மாற்றியிருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அளித்த சமீபத்திய பேட்டியில், “தெலுங்கு திரையுலகம் என்றால் எனக்கு ரொம்பவே பிடிக்கும். கம்பேக் கொடுப்பதற்கு எனக்கு ஒரு நல்ல படம் அமைய வேண்டும். விஜய் தேவரகொண்டாவுடன் நான் நடித்த வேர்ல்ட் பேமஸ் லவ்வர் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அது எனக்கு ஏமாற்றமாகவே அமைந்தது.

நல்ல கதாபாத்திரங்கள் நடித்தால் மீண்டும் தெலுங்கில் நடிக்க தயாராக இருக்கிறேன். புஷ்பா படத்தில் ராஷ்மிகாவின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரம் எனக்கு ரொம்பவே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

ரஷ்மிகா மந்தனா அந்தக் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் நான் இன்னும் அந்தக் கதாபாத்திரத்திற்கு மிக சிறப்பாகவே பொருந்தியிருப்பேன்” என்றார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *