சிக்கலில் இருக்கும் லைக்கா நிறுவனம் : குழம்பிபோயுள்ள டாப் நடிகர்கள்!

சிக்கலில் இருக்கும் லைக்கா நிறுவனம் : குழம்பிபோயுள்ள டாப்  நடிகர்கள்!
  • PublishedMay 17, 2023

தமிழ் சினிமாவில் மட்டும் கிட்டத்தட்ட 1000 கோடி பட்ஜெட்டில் படங்களை தயாரிக்க லைக்கா சுபாஸ்கரன் திட்டமிட்டு இருந்தார்.

அதன்படி ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்தாலும் படத்தை வெளியிடாத நிலை ஏற்பட உள்ளது. இதேபோல் லாரன்ஸ் நடித்து வரும் சந்திரமுகி 2 படத்திற்கும் இதே நிலைமை தான் உருவாகியுள்ளது.

அத்துடன்,  ரஜினி ஜெயிலர் படத்தை முடித்த கையோடு ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கம் படத்தில் நடிக்க இருந்தார். இந்த படத்தையும் லைக்கா தயாரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இப்போது இந்த படம் தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அஜித்தின் ஏகே 62 படத்தின் விடாமுயற்சி என்ற டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டது. இப்போது லைக்கா பிரச்சனையில் சிக்கி இருப்பதால் இந்த படம் தொடங்குவது தாமதமாகும் என கூறப்படுகிறது.

மேலும் சில படங்களும் லைக்காவின் லயன் அப்பில் இருந்து வருகிறது. ரஜினி,  கமல்,  அஜித்,  லாரன்ஸ் போன்ற நடிகர்கள் மரண அடி வாங்கியுள்ளனர். தற்போது அமலாக்க துறையினரால் இந்த படங்கள் எல்லாம் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வரப் போகிறார்கள் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *