இந்த படத்தை பார்க்க டைம் இல்லை : திமிராக பேசிய விஜய் பட நடிகை!

இந்த படத்தை பார்க்க டைம் இல்லை : திமிராக பேசிய விஜய் பட நடிகை!
  • PublishedMay 17, 2023

பிரமாண்டத்தின் உச்சம் என்றாலே அது ராஜமெளிதான். அவருடைய ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சமீபத்தில் ஆஸ்கார் விருதை பெற்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா, அந்த படத்தை பார்க்க டைம் இல்லை எனக் கூறியுள்ளமை பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அதாவது, நடிகை பிரியங்கா சோப்ரா,  சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் பேசும் பொழுது இவரே சம்பந்தமே இல்லாமல் ஆர்ஆர்ஆர் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை.

அதற்கு எனக்கு சுத்தமா நேரமும் கிடையாது என்று கூறி இருக்கிறார். இது வேண்டும் என்றே ராஜமௌலியை அவமானப்படுத்தும் நோக்கில் பேசி இருக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சில நெட்டிசன்கள்,   படம் வெளிவந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் படம் பார்க்கவில்லை நேரமில்லை என்று இவர் சொன்னது இவருடைய திமிரை தான் காட்டுகிறது.

அப்படியே இவர் பார்க்கவில்லை என்றாலும் அதை இப்படி ஒரு பேட்டியில் கூறி அந்த படத்திற்கு அவமானம் சேர்க்கும் படியாக கூறாமல் இருந்திருக்கலாம்.

இதே இது ஒரு ஹிந்தி படம் ஆஸ்கார் விருது வாங்கி இருந்தால் இவரால் இப்படி பதில் சொல்ல முடியுமா தென்னிந்திய படங்கள் என்றால் அப்படி இவருக்கு என்ன ஒரு அலட்சியம். அப்படியே இவர் பார்க்கவில்லை என்றாலும் இதை சொல்லி இருக்கத் தேவையில்லை என விமர்சித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *