மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நக்கல் மன்னன்!

மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுக்கும் நக்கல் மன்னன்!
  • PublishedMay 26, 2023

எத்தனை எத்தனையோ நகைச்சுவை ஜாம்பவான்கள் வந்தாலும் கவுண்டமணியின் அலப்பறைகளுக்கு இன்றளவும் தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் இருக்கிறது.

இந்த நக்கல் மன்னன் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய மறுபிரவேசத்தை கொடுக்க இருக்கிறார்.அதாவது இவர் கடைசியாக வாய்மை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இதற்கு முன்பு அவரை தேடி பல வாய்ப்புகள் வந்தாலும் அதை தட்டிக் கழித்து வந்த கவுண்டமணி இந்த பட கதை பிடித்திருந்ததால் ஓகே செய்திருக்கிறார். இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இந்த படத்தில் மற்றொரு நம்ப முடியாத சஸ்பென்சும் இருக்கிறது.

அதாவது இப்படத்தில் ஒரு முக்கிய சிறப்பு தோற்றத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க சம்மதித்துள்ளார். மேலும் அவருடைய இந்த கேரக்டர் படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்குமாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *