இளையராஜாவின் முகத்திரையை கிழித்தெறிந்த ரஜினிகாந்த்!

இளையராஜாவின் முகத்திரையை கிழித்தெறிந்த ரஜினிகாந்த்!
  • PublishedMay 26, 2023

இதுவரை 1500 படங்களுக்கு மேல் இசையமைத்து இந்திய இசையின் அடையாளமாகவே திகழ்பவர் இசைஞானி இளையராஜா.  இவர் ஏகப்பட்ட தேசிய விருதுகளை வாங்கி குவித்திருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே இளையராஜாவைப் பற்றிய ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்புகிறது. இதனால் இவரை இளையராஜா என சொல்வதை விட சர்ச்சைகளின் ராஜா என்று நெட்டிசன்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

பிரபலங்கள் பலரும் இவரை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்களை காட்டமாக முன் வைக்கின்றனர். அதிலும் இப்போது ரஜினிகாந்த் பற்றி மேடையிலேயே இளையராஜாவின் முகத்திரையை கிழித்த வீடியோ பதிவு ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

கடந்த 1993ம் ஆண்டு ரஜினிகாந்த் திரைக்கதை எழுதி நடித்த திரைப்படம் தான் வள்ளி. இன்றுவரை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜா தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் நிஜமாகவே அந்த படத்திற்கு இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா தான் இசையமைத்தார். இதனை நன்கு தெரிந்த ரஜினிகாந்த் மேடையில் பகிரங்கமாக போட்டுடைத்து விட்டார்.

அதாவது வள்ளி திரைப்படத்திற்கு இளையராஜாவிடம் சென்று இசையமைக்க சொல்லி இருக்கிறார் ரஜினி. அதற்கு இளையராஜா நான் இசை இசையமைக்காமல் கார்த்திக் ராஜா இசையமைத்தால் போதுமா? என கேட்டிருக்கிறார். அதற்கு ரஜினி நீங்கள் என்ன செய்தாலும் சரிதான் என சொன்னாராம். அதை அடுத்து அந்த படத்திற்கு கார்த்திக் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்த விசயத்தை ரஜினிகாந்த் வெளிப்படையாக போட்டுடைத்திருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *