பட வாய்ப்புகளை நிராகரிக்கும் பிரபல நடிகை : இவ்வளவு கண்டிஷன்ஸ் தேவைதானா?
சில நடிகைகள் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்குதோ இல்லையோ தேடி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்றுக் கொண்டு கல்லா கட்டி வருகின்றனர்.
அவர்களுக்கு மத்தியில் அஜித் பட நடிகை ஒருவர் தன்னை தேடி வரும் நல்ல வாய்ப்புகளை கூட தட்டி கழித்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
துணிவு திரைப்படத்தில் அதிரடி நாயகியாக நடித்திருந்த மஞ்சு வாரியார்தான் படவாய்ப்புகளை தட்டிக்கழித்து வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை ஏற்க வேண்டும் என்றால் இவர் எக்கச்சக்கமான கண்டிஷன் போடுகிறாராம். இதனாலேயே பல வாய்ப்புகளை இவர் கைநழுவ விட்டுள்ளார்.
அதாவது கதை சொல்ல அணுகுவதற்கு கூட முதலில் இ-மெயில் அனுப்ப வேண்டுமாம். இப்படி பல லிஸ்டுகளை வைத்துள்ளார். இதனாலாயே வாய்ப்புகள் பரிபோகிறதாம்.