முதல் ஐந்து நாட்களில் வசூலை வாரி வழங்கிய திரைப்படங்கள்!

முதல் ஐந்து நாட்களில் வசூலை வாரி வழங்கிய திரைப்படங்கள்!
  • PublishedApril 15, 2023

சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி முதல் ஐந்து நாட்களில் மட்டும் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது.

அதிலும் இந்த ஆண்டு மட்டும் வெளியான டாப் ஹீரோக்களின் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து மட்டுமல்லாமல் வசூலிலும் சக்கை போடு போட்டுள்ளது. அப்படியாக இந்த ஆண்டு வெளியாகி முதல் ஐந்து நாட்களில் மட்டும் அதிக வசூல் சாதனை படைத்த 5 படங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.

வாரிசு: இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் ஜனவரி 11-ம் திகதி  வெளியான இந்த திரைப்படம், வெளியாகி முதல் 5 நாட்களிலேயே உலக அளவில் 160 கோடி வரை வசூல் செய்த மாபெரும் சாதனை படைத்தது.

துணிவு: இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான திரைப்படம் துணிவு. வாரிசுக்கு போட்டியாக வெளியாகிய இந்த படம் ,   உலக அளவில் 120 கோடி வரை வசூல் செய்தது.

வாத்தி: தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு பிப்ரவரி 17ஆம் திகதி  வெளியான திரைப்படம் வாத்தி. இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் 60 கோடி வரை வசூல் செய்தது.

விடுதலை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வெளியான திரைப்படம் விடுதலை.  இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களில் மட்டும் உலக அளவில் 22 கோடி வசூல் செய்தது.

பத்து தல: இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடிப்பில் மார்ச் 30ஆம் திகதி  வெளியான திரைப்படம் பத்து தல.  இப்படம் வெளியாகி முதல் 5 நாட்களிலேயே உலக அளவில் 19 கோடி வசூல் செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *