“தளபதி 68” டைட்டில் வெளியானது… இறுதி நேரத்தில் டுவிஸ்ட் கொடுத்த விஜய்

“தளபதி 68” டைட்டில் வெளியானது… இறுதி நேரத்தில் டுவிஸ்ட் கொடுத்த விஜய்
  • PublishedDecember 31, 2023

தளபதி 68 படத்தின் டைட்டில் The Greatest of All Time என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே GOAT தான் டைட்டில் என்பது ஒரு வாரத்திற்கு முன்பே லீக்கான நிலையில், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

புத்தாண்டு தினத்துக்கு ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் அளவுக்கு விஜய் தனது ட்விட்டர் பகக்த்தில் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

முதலில் Boss என்றும் Puzzle என்றும் தளபதி 68 படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டதாக தகவல்கள் தீயாக பரவிய நிலையில், அந்த இரண்டு தலைப்பும் இல்லை என அர்ச்சனா கல்பாத்தி அமைதியாக இல்லாமல் வாலன்டியராக வந்து விளக்கம் கொடுத்திருந்தார்.

GOAT தலைப்புக்கு அவர் எதுவும் மறுப்பு தெரிவிக்காத நிலையில், ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்தன. அந்த தலைப்பை கடைசி நேரத்தில் மாற்ற வேண்டாம் என விஜய் அறிவித்த நிலையில், அதே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

G.O.A.T என்பது Greatest of All Time என்பதன் சுருக்கம் தான் GOAT.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *