“தளபதி 68 ” வேற லெவல்ல இருக்கும்.. அப்டேட் சொன்னது யார் தெரியுமா?

“தளபதி 68 ” வேற லெவல்ல இருக்கும்.. அப்டேட் சொன்னது யார் தெரியுமா?
  • PublishedDecember 31, 2023

நடிகர் விஜய்யின் தளபதி 68 படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத், தாய்லாந்து ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக சிறிது இடைவெளி விடப்பட்டுள்ளது.

தொடர்ந்து ஜனவரி முதல் வாரத்தில் சூட்டிங் மீண்டும் துவங்கப்படவுள்ளது. இந்தப் படத்தில் விஜய்யுடன் பிரஷாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது.

மேலும் பிரேம்ஜி, வைபவ் உள்ளிட்ட வெங்கட்பிரபுவின் கேங்கும் படத்தில் இணைந்துள்ளது. அதிகமான நட்சத்திரங்களின் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகி வருகிறது. புத்தாண்டையொட்டி இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாகவுள்ளது.

இதை படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் சமூக வலைதளங்களில் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இந்தப் படம் குறித்து தற்போது பிரேம்ஜி பேசியுள்ளார். அவரிடம் இந்தப் படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,

சூட்டிங் சிறப்பாக நடந்து வருவதாகவும் எக்ஸ் தளத்தில் தயாரிப்பு தரப்பிற்கு அக்கவுண்ட் உள்ளதாகவும் அவர்களிடம் கேட்டால் அப்டேட் கொடுப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் படம் எப்படி வந்துள்ளது என்றும் பிரேம்ஜியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

படம் வேறு லெவலில் வந்துள்ளதாகவும் தளபதி விஜய், வெங்கட்பிரபு மற்றும் யுவன் காம்பினேஷனில் படம் உருவாகி வருவதாகவும் இதற்கு மேல் என்ன வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்றைய தினம் படத்தின் பர்ஸ்ட் லுக் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகவுள்ள நிலையில் அதற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *