பறிபோன இடத்தைப் பிடிக்க போட்டியிடும் ஜீ.வி.பிரகாஷ்!
மிகச் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான ஜீ.வி பிரகாஷ், மீண்டும் இசையமைக்கும் பணிகளில் கவனம் செலுத்த உள்ளாராம்.
ஜீ.வி. பிரகாஷ் படங்களில் ஹீரோவாக நடிக்க தொடங்கியதிலிருந்து படத்தில் இசையமைப்பதை குறைத்துக் கொண்டார். இதனால் நடுவில் வந்த அனிருத் உச்சத்திற்கு வந்து விட்டார். அதுமட்டுமின்றி முக்கிய இசையமைப்பாளர் என்ற பெயரையும் அனிருத் பெற்றிருந்தார்.
இந்த சூழலில் ஜிவி பிரகாஷ் நடித்த படங்கள் எதுவும் சமீப காலமாக பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. ஆகையால் இனி அதிக அளவு இசையில் கவனம் செலுத்தலாம் என ஜிவி பிரகாஷ் முடிவெடுத்துள்ளாராம்.
ஆகையால் இப்போது பெரிய நடிகர்களின் படங்கள் கணிசமாக ஜிவி பிரகாஷிடம் செல்கிறது. இதற்கு முதல் படியாக சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தை கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் தான் இசையமைக்கிறாராம்.
இப்போதே அடுத்தடுத்த நடிகர்களும் ஜிவி பிரகாஷ் புக் செய்வதில் மும்மரம் காட்டி வருகிறார்கள். இதனால் அனிருத்தை தற்போது ஓரம் கட்டி விட்டு அவரது இடத்திற்கு சீக்கிரம் ஜிவி பிரகாஷ் வந்துவிடுவார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.