வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் என தவம் கிடக்கும் ஹரிஸ் கல்யாண் – திட்டி அனுப்பிய வெற்றிமாறன்!

வெற்றிமாறன் படத்தில் நடிக்க வேண்டும் என தவம் கிடக்கும் ஹரிஸ் கல்யாண்  – திட்டி அனுப்பிய வெற்றிமாறன்!
  • PublishedMay 11, 2023

கோலிவுட் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் தான் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் வெளியாகிய அனைத்து படங்களுமே சூப்பர் டூப்பர் வெற்றிப்பெற்றுள்ளன.

இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் எப்படியாவது ஒரு படத்திலாவது, நடித்துவிட வேண்டும் என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் ஆசைப்பட்டுள்ளார். இதற்காக  வெற்றிமாறனை பார்க்கும் போதெல்லாம் அவரிடம் தானாக போய் பேசுவது,  அதுவும் தேடி சென்று போய் எல்லா இடங்களிலும் பூங்கொத்து கொடுத்திருக்கிறார்.

வெற்றிமாறன் கோபத்தில் எதற்கு தினந்தோறும் இப்படி எதற்கு என்னை வந்து பார்க்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு ஹரிஷ் கல்யாண் இப்படி வந்தால் தான் நீங்கள் என்னை மறக்க மாட்டீர்கள். நடிக்க கூப்பிடுவீர்கள் என்று கூறி இருக்கிறார்.

அதற்கு வெற்றிமாறன் எனது கதைக்குத் தேவைப்பட்டால் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கூப்பிடுவேன். தயவுசெய்து இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு செய்ய வேண்டாம்.

நானே கூப்பிடுகிறேன் போ! எனக் கூறியுள்ளார். இதை அவர் அவமானமாக நினைக்கவில்லை. இருந்தாலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *