சாந்தனுவிற்காக களத்தில் இறங்கிய மனைவி : கைக்கொடுக்குமா இராவணக் கூட்டம்!

சாந்தனுவிற்காக களத்தில் இறங்கிய மனைவி : கைக்கொடுக்குமா இராவணக் கூட்டம்!
  • PublishedMay 11, 2023

நடிகர் சாந்தனு பாக்யராஜ் வேட்டிய மடிச்சு கட்டு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பின்பு,  சக்கரகட்டி என்னும் படத்தின் மூலம் ஹீரோவானார். இவர் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் நடனம் ஆட கூடியவரும் ஆவார். ஆரம்பத்தில் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளாததால் தற்போது ராசி இல்லாத நடிகராக பார்க்கப்படுகிறார்.

இந்நிலையில், இவர் சமீபத்தில் இராவண கூட்டம் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தில் கிடைத்த ஏமாற்றம் இவருடைய சமீபத்திய பேட்டிகளிலேயே நன்றாக தெரிகிறது.

படத்தைப் பற்றி பில்டப் எதுவும் பேசாமல் ரொம்பவும் தன்னடக்கமாகவும்,  இந்த படத்தில் நடிப்பதற்குள் அவர் பட்ட கஷ்டங்களை பற்றியும் பேசி வருகிறார். தற்போது அவருடைய பிரமோஷன் வேலைகளை கீர்த்தி சாந்தனு செய்து வருகிறார்.

சாந்தனுவின் காதல் மனைவி கீர்த்தி சாந்தனு பிரபல தொகுப்பாளினி மற்றும் நடன ஆசிரியரும் ஆவார். இவர் இராவண கூட்டம் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கு தன்னுடைய குழு உடன் ஆடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தன் கணவரின் படம் வெற்றி பெறுவதற்காக கீர்த்தி இதுபோல் ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *