அகிலன் படம் எப்படி இருக்கிறது : கிழித்து தொங்கவிட்ட ப்ளூசட்டை மாறன்!
ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்துள்ள அகிலன் திரைப்படம் சமூக கருத்து கொண்ட திரைப்படம் என்ற பாராட்டை பெற்று வருகிறது.
ஆனாலும் சாமானிய மக்களுக்கு அந்த திரைப்படம் அப்படி என்னதான் சொல்ல வருகிறது என்பது தெளிவாக புரியவில்லை. இருப்பினும் படம் முதலுக்கு மோசம் இல்லை என்ற ரீதியில் வசூலை பெற்று வருகிறது.
இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் இந்த திரைப்படத்தை பற்றிய தன்னுடைய விமர்சனத்தை வெளியிட்டுள்ளார். இப்படத்தை ஜெயம் ரவி எப்படித்தான் ஓகே செய்தார் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
படத்தில் ஜெயம் ரவியை டெரராக காட்ட வேண்டும் என்று இயக்குனர் பல முயற்சிகளை செய்திருக்கிறார். ஆனாலும் அவரை க்ளோஸ் அப் காட்சியில் பார்த்தால் அமுல் பேபி என்று கொஞ்ச தான் தோன்றுகிறது என விமர்சித்துள்ளார்.
மேலும் ஒரு படம் என்று வந்து விட்டால் குறைந்தபட்சம் 60 சீன்களாவது இருக்கும் ஆனால் இந்த படத்தில் ஒரு சீனே 15 நிமிடங்கள் வருகிறது. அப்படி பார்த்தால் படத்தில் மொத்தம் 20 சீன்கள் தான் இருக்கும். இதையெல்லாம் ஒரு கதை என்று எப்படி எடுத்தார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதிலும் கருத்து சொல்கிறேன் என்ற பெயரில் கழுத்தை அறுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இப்படி உங்களின் கருத்தை கேட்டு கேட்டே நான் கருத்து விட்டேன் என்று தன்னைத்தானே நொந்து கொண்டும் பேசியுள்ளார்.