இது ஒரு விஷயமா – ஆடையில்லாமல் நடித்த நடிகையின், கரார் பேச்சு!

இது ஒரு விஷயமா – ஆடையில்லாமல் நடித்த நடிகையின், கரார் பேச்சு!
  • PublishedApril 23, 2023

மைனா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை அமலாபால், வேகமாக வளர்ந்து வரும் நாயகிகளில் ஒருவராக இடம்பிடித்தார்.

பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து கரம் பிடித்து, பின் விவாகரத்தும் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து அவர் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ஏராளமான சர்ச்சைகளை சந்தித்தது.

இந்நிலையில், தற்போது ஜீவிதம் என்ற திரைப்படத்தில் முத்தக் காட்சி ஒன்றில் நடித்து சர்ச்சையை சந்தித்துள்ளார்.

அந்த காட்சி இடம்பெற்ற ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ஏகப்பட்ட விமர்சனங்கள் அமலா பாலுக்கு எதிராக குவிந்தது. அதற்கெல்லாம் தற்போது வெளிப்படையாக பதில் சொல்லி இருக்கிறார்.

இந்த படத்தின் கதையை சொல்லும்போதே படத்திற்கு அந்த முத்த காட்சி தான் மிகவும் முக்கியமானது என இயக்குனர் தெளிவாக சொல்லிவிட்டார். கதைக்கு தேவை என்பதற்காக ஆடை படத்தில் ஆடை இன்றியே நடித்தேன்.

அப்படி இருக்கும்போது படத்திற்கு மிக முக்கியமான லிப்லாக் காட்சி எல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று அதிரடியாக பதில் சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *