அரசியலுக்கு அத்திவாரம் போட்ட தளபதி : ஆடியோ லாஞ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!

அரசியலுக்கு அத்திவாரம் போட்ட தளபதி : ஆடியோ லாஞ்சை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள்!
  • PublishedApril 23, 2023

தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். 60 வீதமான படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், ஒக்டோபர் மாதம் வெளியாகவுள்ளது.

இதற்கிடையே தளபதி அரசியலுக்கு வருவதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளாராம். இதனால் லியோ படத்தின் ஆடியோ லாஞ்ச் இதற்கான அஸ்திவாராமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

எப்போதுமே விஜய் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாக்கள் சென்னையில் மட்டுமே நடைபெறும். ஆனால் இந்த முறை லியோ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை திருச்சியில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.

இது விஜய் மக்கள் மன்ற இயக்கத்தின் நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க விஜய் எடுத்த முடிவு. தமிழகத்தில் உள்ள தன்னுடைய மொத்த ரசிகர்களையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டும் என்பதற்காக போடப்பட்டிருக்கும் பிளான்தான் இது எனக் கூறப்படுகிறது.

தளபதி விஜய் இந்த விழாவை தன்னுடைய அரசியல் முன்னோட்ட மாநாடாக நடத்த திட்டமிட்டு இருக்கிறார். அரசியல் மாநாடு என்று சொன்னால் அனுமதி மறுக்கப்பட்டு விடும் என்ற எண்ணத்தில் இதை இசை வெளியீட்டு விழாவாக நடத்துவது போல் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

மேலும் இந்த அரசியல் மாநாட்டில் நடிகரும்,  இயக்குனரும் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் கலந்து கொள்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *